Thursday, October 04, 2012

படையினருக்கு எதிரான சாட்சிகளை முள்ளிவாய்க்காலில் திரட்ட முயற்சி

_50167700_006706707-2முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், படையினருக்கு எதிராகச் சாட்சிகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்த சில அரச சார்பற்ற நிறுவனச் செயற்பாட்டார்கள் இவ்வாறு படையினருக்கு எதிராகச் சாட்சியங்களைத் திரட்ட முயற்சித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு முயற்சிக்கப் படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காகக் குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் பல பகுதிகளைத் தோண்டி வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள்து.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் நோர்வே புலித் தலைவர் நெடியவன் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் இணைந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுள்ளது.
படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் எனச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கல் மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளைத் தோண்டி வருவதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment