Thursday, October 04, 2012

போர்க் குற்றங்கள் குறித்து அமெ. தொடர்ந்து அக்கறை

usa8இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மீறப் பட்டது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அமெரிக்க அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.
இலங்கை நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான  அமெரிக்க  உதவி ராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கை நியூயோர்க்கில் சந்தித்த போது அவர் இந்த விவரங்களைக் கேட்டுள்ளார்.
இந்த விவரங்களை நியூ யோர்க்கிலிருந்து தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இந்த விடயங்கள் எதனையும் இலங்கை அரசு மறைத்து ஒதுக்கிவிட மாட்டாது என்று  தாம் அமெரிக்க அமைச்ச ருக்கு உறுதியளித்திருப்ப தாகவும் திருகோணமலை யில் 5 மாணவர்கள் 2006 ஆம் ஆண்டில் கொல்லப்பட் டமை தொடர்பான புலன் விசாரணைகள் மீளவும் ஆரம் பிக்கப்பட்டிருப்பதாகத் தாம் தெரிவித்திருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கூறினார்.
இந்த வழக்குத் தொடர் பாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படு வார்கள் என்று உறுதியளித்ததாகவும் ஹக்கீம் கூறினார்.
நீதி அமைச்சர் என்ற முறையிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் அமெரிக்க உதவி அமைச்சருடன் பல்வேறு விடயங்களை விரிவாக ஆராய்ந்ததாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குச் சிறப்பான மேடையாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு தரப்புப் பேச்சுக்களை வலியுறுத்தி வருகிறது. இதில் எம்மைத் தவிர்த்து விடுகிறது. அரசியல் தீர்வு காணும்போது முஸ்லிம் பரிமாணமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு எங்களையும் உள்ளடக்குகின்றது என்று தாம் ஓ பிளேக்கிடம் தெரிவித்ததாக ஹக்கீம் கூறினார். கிழக்கு மாகாணத் தேர்தலில் தமது கட்சிக்குக் கிடைத்துள்ள மக்கள் தீர்ப்புக் குறித்தும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment