Tuesday, October 16, 2012

இலங்கை விடயத்தில் மீண்டும் ஒருமுறை சர்வதேசம் தலையிடுவதற்கு சந்தர்ப்பம்; ஐ.தே.க குற்றச்சாட்டு

b588d27c12145264554e81219423c770நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுல திலகரத்ன மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காது இருப்பதன் மூலம் இலங்கை விடயத்தில் சர்வதேச தலையீட்டை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமை உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கயந்த கருணாதிலக்க, குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஒரு வார காலத்திற்கு மேலாகியும், காவற்றுறையினரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை. என்றுள்ளார்.
குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளனர் எனவும் இச் சம்பவம் தொடர்பில் அமைச்சர்கள் கேலி செய்து அதனை மழுங்கடிப்பதற்கு முயச்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது இருப்பதன் மூலம், இலங்கை விடயங்களில் சர்வதேசம் தலையிடுவதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment