
இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது.
இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கவும் அதன் நிர்ப்பந்தம் மத்தியில் தாக்கத்தை உருவாக்கவும் வேறு வழியின்றி திக்குமுக்காடி வருகிறது ஆளும் மத்திய அரசு.
இந்த நகர்வுகளை உற்று நோக்கிய அவர்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தம்மை தயார்படுத்தியுள்ளனர். சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் கழுத்து நெரிக்க முன் அதனை தடுக்கும் முயற்சியில் இந்திய தீவிரமாக இறங்கியுள்ளது.
இலங்கையில் பாகிஸ்தான், சீனா கூட்டாக இணைந்து இந்தியாவை அச்சுறுத்த வேறு வழியின்றி தான் அழித்த தமிழினத்தை மீள தான் வளர்க்க வேண்டிய சூழலுக்கு அது வந்துள்ளது.
No comments:
Post a Comment