
இவ்வாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் மனந்திறந்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பின் குழு நாடு திரும்பியிருக்கிறது. இந்த விஜயம் குறித்த தகவல்களைக் கேட்டபோதே கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் பிரதமரின் மேற்படி கருத்தைக் குறிப்பிட்டுக்கூறினார்.
“அரசியல் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு செல்லாமல் இருப்பது குறித்து பிரதமருடன் பேச்சு நடத்தியபோது விரிவாகப் பேசப்பட்டது. தெரிவுக்குழுவுக்குள் செல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அதற்குத் தேவையான உத்தரவாதங்கள் குறித்து தலைவர் சம்பந்தன் ஐயா பிரதமரிடம் விளக்கமாகக் கூறினார்.
அதை முழுமையாக ஏற்றுக்கொண்ட பிரதமர் எமது நிலைப்பாட்டை அங்கீகரித்ததுடன் எமது கருத்துடன் உடன்படுவதாகவும் கூறினார்’ என்றும் குறிப்பிட்டார் கூட்டமைப்பின் அந்த முக்கியஸ்தர்.
“தமிழ்க் கூட்டமைப்பினர் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளுக்கு சரியான வகையில் முகங்கொடுக்க முடியும். கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் காள்ளுங்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட எமது தலைவர் சம்பந்தன், பேசித் தீர்த்துக்கொள்ளும் பிரச்சினைகளே இருப்பதாகவும் அது தொடர்பிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் என்றும் அந்தத் தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment