Wednesday, October 17, 2012

ஈழத் தமிழினத்தைக் காக்க சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை அவசியம்!கனடாவில் நாடுகடந்த தமிழீழம் வலியுறுத்து

TGTE_logosமுள்ளிவாய்க்காலுக்கு பிந்திய இன்றைய இலங்கைத் தீவின் சூழலில் ஈழத்தமிழர்களின் நிலையான இருப்புக்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென கனேடிய எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் பிரதான எதிர்க்கட்சியான NDP கட்சியின் வெளிவிவகார விமர்சகர் Paul Dewar மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Dan Harris MP for Sc. Southwest- NDP ஆகியோர் கனேடியத் தமிழர் அமைப்புகளுடனான சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர்.
இச்சந்திப்பில் பங்கெடுத்துக் கொண்ட பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மேற்குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளனர்.
சிங்கள அரசினால் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாக நில அபகரிப்பு மற்றும் மொழி கலாச்சாரச் சிதைப்பு, பொருளாதார வளச்
சுரண்டல்கள் உட்பட்ட இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இசந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபையின் தலைவி உஷா சிறீஸ்கந்தராஜா மற்றும் தமிழ்கலைகள் பாரம்பரிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் வின் மகாலிங்கம் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
இலங்கையில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் சர்வதேச மாநாட்டினை புறக்கணிப்பது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த மாநாட்டினை புறக்கணிப்பதற்கு கனேடிய அனைத்து கட்சிகளது ஒப்புதலையும் பெறச் செயலாற்றல், இலங்கை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையினை நடைபெறுவதற்கான அழுத்தத்தினை பிரயோகித்தல் மற்றும் ஈழத் தமிழினத்தின் சமூக அரசியல் பண்பாட்டு பொருளாதார ஆகியவற்றின் நிலையான இருப்புக்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை உருவாக்க உதவுதல் போன்ற வியடங்களுக்கு கனடாவின் கட்சியின் முழுமையான பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன அழிப்பைத் தடுப்பதற்கும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களைத் தடுப்பதற்குமான கனேடிய சர்வகட்சிக் குழுவினரை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கபட்ட கோரிக்கை இச்சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகவுள்ளது.
இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர் வின் மகாலிங்கம் அவர்கள், மூன்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக ஆர்வமாக தமிழர் தரப்பு பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை செவிமடுத்தமை மிகுந்த நம்பிக்கையினை தந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு இவ்வாறான சந்திப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment