Thursday, October 18, 2012

இந்தியா குறித்து சிறிலங்கா இராணுவம் பெருமிதம்

Brigadier-ruwan-wanigasooyaதமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பு இருந்தாலும், சிறிலங்காப் படையினருக்கு இந்தியா மிகச்சிறந்த பயிற்சிகளை வழங்கி வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா படையினருக்கு இந்தியா மிகச்சிறந்த பயிற்சிகளை வழங்குகிறது.
நவீன பயிற்சி முறைகளுடன் கூடிய இந்தப் பயிற்சி, அவர்களின் நிபுணத்துவத்தை உயர்ந்த தரத்தில் பேணுவதற்கு உதவுகிறது.
இந்த ஆண்டுமுதல், இந்தியாவில் பயிற்சி பெறும் சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாம் அங்கு தொடர்ந்து பயிற்சிக்குச் செல்வோம்.

சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கும், இந்த ஒத்துழைப்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment