Thursday, October 18, 2012

சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை – சுரேஸ் பிறேமச்சந்திரன்

suresh-premachandran_1-1சிறிலங்கா அரசுடன் மீண்டும் அரசியல் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன செய்தி நிறுவனத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிடுகையில்,
“நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அரசு தீர்வு கண்டால் தான், அவர்களுடன் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க முடியும்.“ என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான சந்திப்பை முடித்துத் திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களை மீளத்தொடங்கும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து கருத்து வெளியிட்ட சுரேஸ் பிறேமச்சந்திரன்,
“இல்லை, அது உண்மையில்லை. பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்தோ, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைவது குறித்தோ நாம் தீர்மானிக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment