
இது தொடர்பிர் அவரது கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான ‘கன்சர்வேடிவ்’ கட்சி, தனது கட்சிக்கான
உப கட்சியாக பிரி்த்தானியத் தமிழர்களைக் கொண்டு ‘பிரிட்டிஷ் தமிழர்களின்
கன்சர்வேடிவ்’ கட்சி என்ற அமைப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்ற
செய்தி, உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்களுக்கு பெருமை அளிக்கின்ற
செய்தியாகும்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சியில் பிரித்தானிய
தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கிலாந்தில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த கட்சயினர் இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறை பாராட்டுதற்குரியது என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் தமிழக முதல்வராக இருந்த போதே இறுதிப்போரில் ஈழத்தமிழர்கள் எண்ணுக்கணக்கின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.
அப்போது அதிகாரம் மிக்க தலைவராக இருந்த இவர் ஈழ மக்களுக்காக எதுவுமே
செய்யாது இப்போது சுடலைஞானம் பேசுகிறார் என் தமிழகக் கட்சிகள்
விமர்சித்துள்ளன.
No comments:
Post a Comment