Thursday, October 25, 2012

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மக்கள் தொடர்மழையால் அவதி

images (54)கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்பல வன்பொக்கணை, முள்ளி வாய்க்கால், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் அண்மையில் மீளக்குடியமர்ந்த சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வாழ்விட வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளன.
இந்த நிலைமை தொடர்பில் அம்பலவன் பொக்கணையில் அண்மையில் மீள் குடியேறிய ந. நவரட்ணம் என்பவர் கருத்து தெரிவிக்கையில்;
” செம்மன் குன்று, மாத்தளன், புது மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கனை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர்  பிரிவில் சுமார் 360க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
சுமார் 300 இற்கும்  மேற்பட்ட குடும்பங் களின்  வீடுகள் முழுமையாக  அழிவடைந்துள்ளன. இறுதியாக மீளக்குடியமர்த்தப் பட்டவர்களுக்கு தற்காலிக வீடுகளை வழங்குவதற்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பற்றி எந்தவித கவனமும்  செலுத்தப்படவில்லை அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
எனது குடும்பம் கடந்த மூன்று நாள்களாகப் பெய்து வரும் கடும் மழையினால்  தறப்பாள் கொட்டகையின் கீழ் அவதிப்படுகிறது. எனக்கு ஆறுபிள்ளைகள்,   மனைவி என நாங்கள் 8 பேர், அந்தக் கூடாரத்துக்குள்ளேயே அவதிப் படுகிறோம்.
இரவு வேளைகளில் மழை பெய்தால் நித்திரையும் இல்லை. மழைகாலம் என்பதால் விஷ ஜந்துக்களும் அதிகம். அதற்கு பயம் தான் என்றார். இதே இடத்தில் தனது அவலத்தை விவரிக்கிறார் சி. இளங்குமரன். ” கடந்த போர் எமது வாழ்வையும் எமது சொத்துக்களையும் முழுமையாக அழித்து விட்டது. இப்போ எதுவித வசதிகளும் இன்றி மீளக் குடியமர்ந்துள்ளோம். தற்போது நிவாரணம் மட்டும் கிடைக்கின்றது. வேறு எந்த உதவிகளும் இல்லை. மீள்குடியேறிய பகுதியில்  உதவித் திட்டங்களை செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் இல்லை.
அரச அதிகாரிகளுக்கு இல்லை. என பாகுபாடுகளை கட்டி வருகின்றன. போர், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பாகுபாடு காட்டி இழப்புக்களை ஏற்படுத்த வில்லை. எல்லோருமே பாதிக்கப்பட்டவர்கள், இரண்டு நாள்களாக பெய்து வரும் கடும் மழையினால் நாங்கள் அவதிப்படுகின்றோம்.
36 அடி நீளமான மிகவும் விசாலமான வீடு கூரைகள் இன்றி குண்டுச் சிதறலினால் சேதமடைந்து கிடக்கிறது. நானும் எனது குடும்பத்தினரும் மாமரத்தின் கீழ்  தறப்பாள் கொட்டகை ஒன்றினை அமைத்து அதில் பல்வேறு சிரமங்களுடன் வாழ்ந்து வருகின் றோம் என்றார்.
தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளோம் என்று மக்கள் தெரிவித்த  கருத்துக்கள் தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைத்  தொடர்பு கொண்டு கேட்ட போது ” இது வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 ஆயிரம் குடும்பங்கள் வரையில் மீள் குடியேறியுள்ளனர். செய்யப்பட்ட  புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன் பொக்கணை போன்ற பகுதிகளில் உள்ளன. இவர்களுக்கு உதவிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை.
எனினும் கட்டம் கட்டமாக பல்வேறு நிறுவனங்கள் உதவிகளைச் செய்து வருகின்றன. சகலருக்கும் உதவித் திட்டங்கள் கிடைக்கும், அதற்குரிய வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என எவரும் புறக்கணிக்கப்படவில்லை என்றார்

No comments:

Post a Comment