நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்காவை சான்டி சூறாவளி தாக்கியுள்ள நிலையில், தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, சூறாவளி காரணமாக மன்ஹாட்டனில் உள்ள அதிகாரபூர்வ வதிவிடத்தில் அடைக்கலம் தேடியுள்ளார்.
மன்ஹாட்டன் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதுடன்,பாலித கொஹன்னவின் அதிகாரபூர்வ வசிப்பிடமும் வெள்ளத்தினால் சூழப்பட்டு தனித்து விடப்பட்டுள்ளது.
சான்டி சூறாவளி காரணமாக தற்போது நியூயோர்க் நகரில் எல்லா செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டு நகரமே இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment