Saturday, October 20, 2012

செயற்றிட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர்ந்தோர் ஒத்துழைப்பர்: பிரிட்டன்

imageகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டம், இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உதவும் என்பதுடன், அத்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற முடியும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது
உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள் என்ற திட்டத்தில் தேசிய செயற்றிட்டம் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்றிட்டத்தில் பிரயோசனமான பரிந்துரைகள் இருக்கின்றன. அது அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்கவும், பலப்படுத்தவம் உதவும்.
பொதுமக்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அதனை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் உதவும். ஆதலால், செயற்றிட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

No comments:

Post a Comment