தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள்
என்பது அவுஸ்ரேலியா ‘ டீக்கின் பல்கலைக்கழகத்தில்” கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றுள்ளது.இதில் அவுஸ்திரேலிய பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி
உரையாற்றினார்.
ஆரம்பத்தில் தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்கள் எள்ற நிலையில் பிரிக்கப்பட்டிருந்த இலங்கையை, பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் மத்திய நிர்வாக ஆட்சியாக மாற்றியமைத்தனர்.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும், சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள அரசியல் திட்டத்தை, மொழியை அடிப்படையாக கொண்டு உருவாக்கினர். இதனால் தமிழர்கள் கல்வி மற்றும் தொழில் துறையில் புறக்கணிக்கப்பட்டனர்.
இந்த புறக்கணிப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்திய போது அது வன்முறையாக மாறியது. இது பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தமிழர்களுக்கு எதிரான உத்தியோக பூர்வ வன்முறையாகவும் மாறியது.
இதனடிப்படையில் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, அமைதியாக இடம் பெற்ற போராட்டங்கள் போராளி குழுக்களை உருவாக்கின.
இந்தநிலையில், யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பயங்கரவாத யுக்திகளை கையாண்டதுடன் பொது மக்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டார்கள்.
2009 ஆம் ஆண்டு அரசாங்கம் வெற்றி பெற்ற யுத்தத்தின் போது நாற்பாதாயிரம் வரையான பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்தநிலையில், வெற்றி பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கையில் இடம் பெறுவதாக பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி குறிப்பிட்டார்.
ஆட்கள் காணமல் போதல், கொலைகள், சித்திரவதைகள், பலாத்கார இடப்பெயர்வு உட்பட இராணுவ ஆக்கிரமிப்பால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற முடியாத நிலை தொடர்கிறது.
ஆட்கள் காணாமல் போதல் நாள் தோறும் இடம் பெறும் சம்பவமாக மாறியுள்ளது. தமிழர்கள் மட்டுமல்லாது, செய்தியாளர்கள் உட்பட்ட சிங்களவர்கள் கடத்தப்படுகின்றார்கள்.
இந்த காரணங்களே இலங்கையில் மக்கள் பிற நாடுகளுக்கு தப்பி செல்ல ஏதுவாக இருக்கின்றது என்றும் அது தீவிரமான நிலையை அடைந்துள்ளதாகவும் பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment