“திரைப்படங்கள்
பொழுதுபோக்கும் வெறும் கேளிக்கை ஊடகங்கள் மட்டுமல்ல அதன் வாயிலாக ஒரு தேச
விடுதலைப்போரையும் முன்னெடுத்துச் செல்ல முடியும்” கவிஞர் காசி ஆனந்தன்,
நாம் தமிழர் கட்சியின் நிறுவுனர் இயக்குனர் செந்தமிழன் சீமான், இயக்குனர் புகழேந்தி ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்
இயக்குனர் இகோர் இயக்கியிருக்கும் ஈழத்தமிழருக்கானத் திரைப்படம்
என்கிற முத்திரையுடன் வெளிவர இருக்கும் தேன்கூடு படத்தின் முன்னோட்ட
வெளியீட்டு விழா
நேற்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசைத்தட்டினை இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர் ஜனநாதன் பெற்றுக் கொண்டார்.
தேன்கூடு திரைப்படம் பற்றி விழாவில் கலந்துகொட்ட திரையுலக பிரமுகர்கள் ஈழ விடுதலையை நிலைநிறுத்திப் பேசினர்.
இயக்குனர் அமீர் பேசுகையில்…
“சிறிய வயதில் இது குடும்பத்துடன் பார்க்கவேண்டிய பொழுதுபோக்குத்
திரைப்படம் என்கிற முத்திரையுடன் வந்த படங்களைப் பார்த்திருக்கிறேன்.
முதல்முறையாக ஈழத்தமிழ்த் திரைப்படம் என்கிற முத்திரையைத் தாங்கி வரும்
படமாக தேன்கூட்டினைப் பார்த்துப் பிரமிக்கிறேன். 2006 இலேயே நானும்
இயக்குனர் சீமானும் ஈழழ்ப்போரினைப் பதிவு செய்யும் படம் ஒன்றினை இயக்க
முற்பட்டோம்.
அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போதே ஈழப்போர்
உச்சக்கட்டத்தை அடைந்து முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறிவிட்டது. இன்று
வரை அப்படி ஒரு படம் இயக்கவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியுடனேயே இதுபோன்ற
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.
ஈழாப்போரினை அடிப்படையாகக் கொண்டு தேன்கூடு எடுத்ததில் இகோருக்கு எனது
பாரட்டுகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இங்கே தமிழ் ஆர்வலர்கள்
நிறையப்பேர் இருக்கிறார்கள், ஆனால் தமிழர் ஆர்வலர்கள் மிகவும் குறைவு.
தமிழ்மொழியினை மட்டும் காப்பாற்றி விட்டு தமிழர்களை ஒழித்தக் கட்டப்
புறப்படுவது என்ன நியாயம்.
ஈழப்போரை மையமாக வைத்தும் திலீபனின் தியாகத்தை மையமாக வைத்தும்
சுபரமணிய சிவாவும் ஆனந்த் எனபவரும் படங்களை இயக்கிக் கொண்டுள்ளனர்.
போராளிகள் சிலரை அழித்து விட்டால் ஈழப்போரே முடிந்து விட்டதாக சிங்கள் அரசு
நினைக்க வேண்டாம் , உணர்வுகளை யாராலும் அழிக்கமுடியாது” என்று பேசினார்.
கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில்…
அல்ஜீரிய விடுதலைப் போராளி அலி எனப்படும் மாவீரனின் போர்க்களத்
தியாகங்களை தன் உடம்பில் வெடிகுண்டினைக் கட்டிக்கொண்டு எதிரிப்படைகளை
அழிக்கும் அவனின் போர்த்திறன் அடங்கிய படத்தினை விடுதலைப்புலிகள் தலைவர்
பிரபாகரன் தனக்குப் பலமுறைப் போட்டுக்காட்டியிருக்கிறார்.
பிரபாகரன் ஊடகத்தைப் பயன்படுத்தி உணர்வுகளையும் எழுச்சியினையும்
ஊட்டினாரோ அதே உணர்வுகளைக் கொடுக்கும் படமாகத் தேன்கூடு
எடுக்கப்பட்டிருக்கிறது.
75 ஆண்டுகால சினிமா வரலாற்றில் ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டில்
எடுக்கப்படும் படங்களுக்கு மிகுந்த வரவேற்பினைக் கொடுத்திருக்கிறார்கள்
அதற்குத் தமிழக மக்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்கிற நிலை மாறி
இன்று ஈழப்போரினை விளக்கும் படங்களைத் தமிழ்த் திரையுலகினர் எடுத்துக்
கொண்டிருப்பதால் ஈழத்தமிழர்கள் இன்று தமிழக்க் கலையுலகிற்குக்
கடமைப்பட்டவர்களாகிறார்கள்” என்றார்.
செந்தமிழன் சீமான்,பேசுகையில்…
“கலையும் இலக்கியமும் மக்கள் உணர்வுகளைப் பதிவு செய்யும் ஊடகங்கள்
என்கிற மார்க்ஸ்ஸின் கூற்றை அப்படியே பின்பற்றியவர் பிரபாகரன்.
பேச்சுக்களும் – திரைப்படமும் இராணுவத்தின் பலம் மிக்க படைப்பிரிவுகள்
என்று அவர் கருதினார். எமது இனத்தின் விடுதலைப்போரினைப் படமாக எடுக்க
வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். ஆணிவேர், எல்லாளன் போன்ற
படங்கள் அவர் விருப்பப்படி எடுக்கப்பட்ட படங்களே! பிரேவ் ஹார்ட் என்ற
பட்த்தை வீர நெஞ்சம் என்கிற பெயரில் தமிழில் அனைவரும் பார்க்கச் செய்தார்
அவர். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கினைப் போன்று
தேன்கூடு பட்த்தினை எடுத்திருக்கிறார். இகோர் தமிழகத்தின் ஸ்டீபன்
ஸ்பீல்பெர்க என்றால் மிகையாகாது.
584 இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இலங்கை அரசு இந்தியாவிற்கு
நட்பு நாடு என்றால் இந்தியா எனக்குப் பகை நாடே! தமிழ் நாடு என் நாடு
இந்தியா எனது பக்கத்து நாடு என்கிற நிலைமை வந்துவிட்ட்து. இந்த நிலைமை
நீடிக்காமல் பார்த்துக் கொள்வது இந்திய அரசின் கைகளில் இருக்கிறது.
அமெரிக்க, சீன படங்களை இந்தியாவில் திரையிடமுடியும் கேட்டால் உலகமயமாக்கம்
என்பார்கள் ஆனால் நம் நாட்டவருக்காக எடுக்கப்பட்ட நமது படங்களை இங்கே
திரையிட முடியவில்லை.
இன்று தலைவரும் போராளிகளும் களத்தில் இருந்தால் உலகமுழுதும் இந்தப் படம் பிரமாண்டமாகத் திரையிடப்பட்டிருக்கும்..
எனது உணவை நானே சாப்பிடுவது போல எனது சுவாசத்தை நானே சுவாசிப்பது போல எனது விடுதலையையும் நானே போராடிப்பெற்றுத்தான் ஆகவேண்டும்.
இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசுகையில்…
ஈழப்போரின் முக்கியமான காலகட்டங்களாக்க் கருதப்படும் மே மற்றும்
நவம்பர் மாதங்களில் எந்த விதமான கலை நிகழ்ச்சி நட்த்திக்
கொண்டாடிக்கொண்டிருக்காமல் நவம்பர் மாத்த்தினை மாவீர ர்கள் மாதமாக்க்
கொண்டாடுவதை முறியடிக்கச் செய்யும் சிங்கள அரசுக்குத் துணைபோகாமல்
இருப்போம் என்றார்.
விழாவில் கலப்புலி எஸ் தாணு, உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், இயக்குனர் ஐந்து கோவிலன் ஆகியோர் உரையாற்றினார்கள்.



No comments:
Post a Comment