Tuesday, November 20, 2012

லண்டனில் டிசம்பர் 12-ந்தேதி காந்தி எழுதிய கடிதங்கள் ஏலம்

C87051F4-1F8F-4356-B167-3AE803FC1F86_T_secvpfமகாத்மா காந்தி எழுதிய 2 கடிதங்கள் லண்டனில் உள்ள ‘சோத்பை’ ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலம் வருகிற டிசம்பர் 12-ந்தேதி நடக்கிறது.
காந்தி கடந்த 1922-ம் ஆண்டு சபர்மதி சிறையில் இருந்தார். அப்போது அவர் தேசிய கீதம் எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் துவி ஜேந்திர நாத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘யங் இந்தியா’ என்ற அமைப்புக்கு துவி ஜேந்திர நாத் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பென்சிலால் 2 பக்கங்கள் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது ரூ. 6 லட்சத்து 15 ஆயிரம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி தனது நண்பர் ஒருவரின் தாயார் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதினார். அதுவும் ரூ. 3 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் போகும் என கருதப்படுகிறது.
இவை தவிர 1950-ம் ஆண்டின் இந்திய அரசியலமைப்பின் முதல் பதிப்பு ஒன்றும் ஏலத்தில் விடப்படுகிறது. அதில், அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். ஷேக்ஸ்பியரின் ‘கல்லி வரின் பயணம்’ உள்ளிட்ட பல்வேறு அரிய இலக்கிய நூல்களும் ஏலம் விடப்படுகின்றன.

No comments:

Post a Comment