வன்னியில்
இருந்து போரினால் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த செட்டிக்குளம் மெனிக் பாம்
பிரதேசத்தில் கணிசமான பகுதி நிலத்தை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது.
மெனிக் பாமில் சிறிலங்கா இராணுவம் 10 ஏக்கரில் பழமரப் பண்ணையை நிறுவவுள்ளது.
இதே பகுதியில் பிறிமா நிறுவனத்துடன் இணைந்து சிறிலங்கா இராணுவம் 225 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடும் பண்ணை ஒன்றையும் உருவாக்கவுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவம் வன்னியில் 2430 ஏக்கர் அரசகாணிகளைக் கைப்பற்றி, பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment