சட்டவிரோதமான
முறையில் கடற்தொழிலில் ஈடுபடும் இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு
எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை, பெலிஸ், கம்போடியா, பனாமா,
பிஜி, கினியா, டோகோ மற்றும் வனாட்டு ஆகிய நாடுகளுக்கு எதிராகவே ஐரோப்பிய
ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் கடற்தொழிலில்
ஈடுபடும் செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள்
தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், இந்த எட்டு நாடுகளையும் கறுப்புப்
பட்டியலில் இணைத்துக் கொள்ள நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்தொழில்
ஆணையாளர் மரியா டமனாகி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் இந்நாடுகள் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் கால அவகாசம் வழங்க தீர்மானித்ள்ளது.
இந்தக் கால அவகாசக்குள் மேம்பாடுகளை
வெளிப்படுத் இந்நாடுகள் தவறினால், இந்த நாடுகள் மீது வர்த்தக நடவடிக்கைகள்
குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி வரும் என மரியா டமனாகி
கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுக்கப்பட்ட
இந்த எச்சரிக்கையை இந்நாடுகள் கரிசனை கொள்ளாது விட்டால், இந்நாடுகளில்
இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளுக்கு
தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின
No comments:
Post a Comment