Wednesday, November 21, 2012

அவுஸ்திரேலியாவில் இருந்து 332 இலங்கைக்கு வந்துள்ளனர்

b96a9188dc09b6809cc2a6383d6ede2dஅவுஸ்திரேலியாவில் இருந்து இதுரை 332 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று நவ்ரு தீவில் புகலிடக் கோரிக்கையாளர் முகாம்கள் நிறுவப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு அதிகளவான இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
புகலிடம் கோருவதற்கான தகுதி இல்லாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களே தன்னார்வ அடிப்படையிலும், பலவந்தமான முறையிலும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

படகுகளில் வருபவர்களை நவ்ரு தீவுகளுக்கும், இலங்கைக்கும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதன் மூலம், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் எவ்வித நன்மை இல்லை என்பது புலனாகியுள்ளதாக அவுஸ்திரேலிய குவரவுத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையை வந்தடையும் இவர்கள் விமான நிலையங்களில் வைத்தே புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment