ஈழ
விடுதலையின் இலட்சியம் சுமந்து பல வடிவங்களில் பகை மோதி வென்றவர்கள்
மாவீரர்கள். தாய்நிலத்தின் காவல் தெய்வங்களாக மண்ணுக்கு புது முகவரி தந்து
விடுதலைக்கு வித்தாகி மண்ணுறங்கும் மாவீரர்கள் வாழும் துயிலுமில்லமே
தமிழ்த் தேசியத்தின் ஆலயம்.
காலத்தால் அழியா காவியங்களான இந்த
மாவீரர்கள் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் கெளரவமாகமும் வாழவேண்டும்
என்பதற்காக களமாடி வீழ்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களை
மதிப்பளிப்பளிப்பதில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் நிறைவும்,
பேருவகையும் அடைகின்றது.
அதற்கமைய லண்டன் புறநகர் பகுதியான
மில்ரன்கீன்ஸ் பகுதியில் உள்ள 1st Ledger Court, Great Linford, Milton
Keynes, MK14 5HA எனும் முகவரியில் அமைந்துள்ள SANKII RESTAURANT &
CAFE மண்டபத்தில் எதிர்வரும் 22-11-2012 வியாழக்கிழமை மாலை 6:00 மணிமுதல்
இரவு 9:30 வரை மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் நிகழ்வு
ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மறு நாளான எதிர்வரும்
23-11-2012 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிமுதல் இரவு 9:30 வரை வடமேற்கு
லண்டன் பகுதியில் உள்ள George V Avenue, Pinner, HA5 5RP அனும் முகவரியில்
அமைந்துள்ள NOWER HILL HIGH SCHOOL மண்டபத்தில் மாவீரர்குடும்பங்களை
மதிப்பளிகும் நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
இந்த நிகழ்வில் அப்பகுதிகளைச் சேர்ந்த
மாவீரர் பெற்ரோர், சகோதரர், மற்றும் உருத்துடையோர்களை வந்து
கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அன்புரிமையோடு
கேட்டுக்கொள்கின்றது.
ஏனைய பிராந்தியங்களுக்கான மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் நிகழ்வு இடங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்
ஐக்கிய இராச்சியம்
TEL: 020 8908 5580
tnrfmedia@gmail.com
No comments:
Post a Comment