இங்குள்ள
மக்கள் தமக்கான மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதாயின் சுமார் முப்பது
கிலோ மீற்றர் தூரத்துக்கு சென்றே சிகிச்சை பெறவேண்டியுள்ளது.
முல்லைத்தீவு, புதுமாத்தளன், வலைஞர்மடம் பகுதிகளில் மீள்குடியேறிய
குடும்பங்கள் மருத்துவவசதி மற்றும் இதர வசதிகள் இன்மையால் தினமும் பல்வேறு
சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், வலைஞர்மடம்
உள்ளிட்ட இடங்களில் தற்போது 460 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்
மீளக்குடியேறியுள்ளன.
இந்தப் பகுதி மக்களுக்கான மருத்துவச் சேவையை வழங்கும் புதுமாத்தளன்
மருத்துவமனை இதுவரை மீள ஆரம்பிக்கப்படவில்லை. அத்துடன் இந்தப் பகுதிக்கான
பிரதான வீதி முதல் ஏனைய எந்த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாமல்
காணப்படுகின்றன.
இதனால் இங்குள்ள மக்கள் தமக்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி
செய்வதாயின் சுமார் முப்பது கிலோ மீற்றர் தூரத்துக்குச் சென்றே சிகிச்சை
பெறவேண்டியுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மருத்துமனை
இயங்குகின்றபோதும், சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் போதுமான
வசதிகள் அங்கு இல்லை.
இவ்வாறு எதுவித வசதிவாய்ப்புக்களும் இன்றி மீள்குடியேறி வசித்துவரும்
சுமார் 460 வரையான குடும்பங்களும் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி
செய்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment