Saturday, November 24, 2012

கில்ட்வூட் தொகுதியின் ஒன்டாரியோ நாடாளுமன்ற வேட்பாளராக ஒரு தமிழர்

imageகனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான கென் கிருபாஸ்காபரோ கில்ட் வூட் (Guildwood) தொகுதியின் ஒன்டாரியோ மாகாண சபை வேட்பாளராக புரோகிரசிவ் கன்சவேட்டிவ் கட்சி (PC) சார்பில் போட்டியிட வருகிற டிசம்பர், பத்தாம் நாள் (Dec 10, 2002) தனது வேட்பாளர் மனுவை தாக்கல் செய்கின்றார்.
தமிழ் சமூகத்தில் பல ஆண்டுகாலம் சிறந்த தொண்டனாக நின்று பணிபுரியும் கென் கிருபா அவர்கள் தமிழர் செறிந்து வாழும் ஸ்காபரோ (Scarborough) கில்ட்வூட் பகுதியில் வரும் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது அவரது வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

கனயடித் தமிழர்கள் கனடிய அரசியல் நீரோட்டத்தில் தாக்கம் மிகுந்தவர்களாக சமீப காலமாக மாறிவரும் நிலையில் தமிழர்களை தம் கட்சி சார்பில் நிறுத்த பிரதான மூன்று கட்சிகளிடையேயும் சமீபகாலமாக என்றுமில்லாத ஆர்வம் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்டாரியோ (Ontario) மாநிலத்தில், அதிலும் குறிப்பாக ஸ்காபரோ தொகுதியில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது தமிழர்களிடையே மீண்டும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இதன் அருகில் உள்ள தொகிதியான ரூச்ரிவர் (Rouge River) தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராதிகா சிற்சபை ஈசன் முதல் தமிழராக பாராளுமன்றத்துக்கு மக்களால் அனுப்பி வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கென் கிருபா அவர்கள் ஒன்டாரியோ PC கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும், 1998 முதல் கடந்த 20 ஆண்டுகள் நிதி சேவைகள் துறையில் அனுபவம் வாய்ந்தவராகவும், ஒன்டாரியோ நிதி சேவைகள் ஆணைக்குழு மற்றும் உரிமம் பெற்ற டொராண்டோ வீடு வாரியம் மற்றும் ஒன்டாரியோ கவுன்சில் ஆகியவற்றிலும் உறுப்பினர் என்பதுடன் கனடிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவராகவும் கடந்த ஆண்டுகளில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கென் கிருபா கனடா கன்சர்வேடிவ் கட்சி (PC) Scarborough Centre EDA மற்றும் Scarborough Centre மாகாண PC துணை தலைவர் பதவிகளில் பணியாற்றினார். கூடுதலாக, 2007 இல் அவர் ஸ்கார்பாரோ மாகாண தேர்தல் பிரச்சார உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஒன்டாரியோ நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் சகல கட்சிகளும் தம்மை தயார்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு: http://www.kenkirupa.ca

No comments:

Post a Comment