Wednesday, November 28, 2012

பிரித்தானிய மாநகரில் முருகதாசன் திடலில் பெருந் திரல் மக்கள் பலத்துடன் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

IMG_8771இன்று காலை பிரித்தானிய மாநகரில் முருகதாசன் திடலில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாக தமிழீழ தேசியக் கொடியினை 10.00மணியளவில் நாடு கடந்த அரசின் அரசியல் வெளிவிவகார அமைச்சர் தனிகாசலம் தயாபரன் ஏற்ற பிரித்தானிய கொடியினை பேராசிரியர் பீற்ரர் சேக் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின
கடும் குளிராகவும் ஓளியற்ற வேளையிலும் அப் பகுதியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது அவ் வேளையில் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் வந்து மறைந்தமை சகலர் மனங்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
12.00 மணியளவில் பான்ற் வாத்தியக் குழு இசை முழங்க மாவீரர் குடும்பங்கள் அழைத்து வரப்பட்டு பிரத்தியேக இருக்கைகளில் அமர வைக்கப்பட்டதுடன் பதினையாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புடை சூழ தமிழீழ விடுதலைப்
புலிகளின் உத்தியோக பூர்வ அறிக்கை புலிகளின் குரல் வானெலியில் ஊடாக நேரடி ஒலிபரப்பப் பட்டு ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டது.
அதனைத் தெடர்ந்து பொதுச் சுடரினை தமிழ் தேசிய நினை வேந்தல் அக பணிமனைத் தலைவியும் மூன்று மாவீரர்களின் தாயுமான ரத்னேஸ்வரி அம்மா ஏற்ற ஈழத்து கல்லறைகளுக்கு இணையாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகட்கு வருகை தந்தவர்களால் சுரர் ஏற்றப் பட்டது.
தெடச்சியாக மாவீரர் துயிலும் இல்லப் பாடல் இசைக்க கார்த்திகைப பூ மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டதனைத் தொடர்ந்து மாவீரர் நாளின் சிறப்புரையினை திரு.மாறன் அவர்கள் ஆற்ற ஏனைய உரைகளை பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரிம் மாட்டீன் மற்றும் நாடு கடந்த அரசின் உதவிப் பிரதமர் வி.உருத்திராபதிசேகர் ஆகியோர் வழங்கியிருந்தார்.
அதனைத் தெடர்ந்து நாடு கடந்த அரசின் உத்தியோக பூர்வ அறிக்கை நாடுகடந்த அரசின் அரசியல் வெளிவிவகார அமைச்சர் தனிகாசலம் தயாபரன் அவர்களால் வாசிக்கப்பட்டதுடன் பிரித்தானிய இளையேர்களும் தமது உரைகளை வழங்கி இருந்ததுடன் இசைநிகழ்ச்சியும் இடம் பெற்றது சிறப்பம்சமாகும்
திரு.சங்கீதனின் அவர்களின் உரையும் உறுதி எடுப்புடனும் நிகழ்வு இறுதிக்கட்டத்தை அடைய தேசியக் கெடி இறக்கப் பட்டு ஈழத்தின் எழுச்சி கீதமாம் நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் எனும் பாடல் இசைக்க மழைத் தூரல்களுடனும் பங்கு பற்றுனர்களின் கண்ணீரூடன் நிகழ்வு நிறைவுற்றது

No comments:

Post a Comment