முல்லைத்தீவு
அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்திலும், இறுதிப் போரின் போது உயிரிழந்த
போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட வலைஞர்மடம் பகுதியிலும் மாவீரர்
தினமான நேற்று புலிக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள்
தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரும்
படைச் புலனாய்வாளர்களும் தமது நடவடிக்கைகளை நேற்றுத்
தீவிரப்படுத்தியிருந்தனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகளின்
மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இடங்களில் இத்தனை கண்காணிப்புக்களையும்
மீறி தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடி இரவோடு இரவாக உச்சத்தில்
பறக்கவிடப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
முல்லைத்தீவு அலம்பில் துயிலுமில்லத்தில்
உள்ள புளியமரம் ஒன்றின் உச்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததை அந்தப்
பகுதி மக்கள் பலரும் அவதானித்திருந்தனர். அத்துடன் இறுதிக்கட்டப் போரின்
போது உயிரிழந்த போராளிகள் தளபதிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட
வலைஞர்மடம் பகுதியிலும் புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
படையினரதும் படைப் புலனாய்வுப் பிரிவினரதும் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு புலிக்கொடிகள் ஏற்றப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
No comments:
Post a Comment