Monday, November 26, 2012

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்

imageயாழ் பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.பல்கலை வளாகத்தில் கலைப்பீடம், விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பீடங்களிலும், மாணவர் ஒன்று கூடும் இடம்,  சிற்றுண்டிச்சாலை,  அறிவித்தல் பலகைகள், என பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

அந்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் காணப்படுகின்றது. ”போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை”, “எத்தனை தடைகள் வரினும் எமது மாவீரரின் இலட்சியத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்”, விழ விழ எழுவோம் புலிகளின் வீரத்திற்கு எல்லை உண்டா?’’ அண்ணனின் வழியில் நின்று தமிழீழத்தை நாம் மீட்போம்” போன்ற வீர வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது, அந்த சுவரொட்டிகளின் கீழே தமிழீழ இளையோர் அமைப்பு, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”   

No comments:

Post a Comment