Tuesday, November 20, 2012

மோதல்களை உடன் நிறுத்தவும்: பான் கீ மூன்

BKMகாஸாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அங்கு யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த வன்முறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுடன் இரு தரப்புகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் எகிப்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தான் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment