Tuesday, November 20, 2012

உலகத்திலே பாரிய மனித உரிமை மீறல்களை அமெரிக்காவே செய்கிறதாம்; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

3dd01b829e6bda0dbcfadf4f676fd8d7உலகத்திலே பாரிய மனித உரிமை மீறல்களை அமெரிக்காவே மேற்கொள்கின்றது என ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையானது அமெரிக்கா செய்கின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டுகொள்ளாமல்,  இலங்கை போன்ற சிறிய நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளை பாரிய விடயமாக வெளிப்படுத்தி செயற்படுகின்றமை வேடிக்கையாக இருக்கின்றது.
இலங்கை விவகாரங்களில் மேற்குலக நாடுகள் சொல்வதைக் கேட்டுத்தான் எப்போதும்  ஐ.நா செயற்பட்டு வருகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஐ.நா. அர்தபுஷ்டியுடன் செயற்படவில்லை. அவ்வாறு செயற்பட்டிருப்பின் இன்று இரகசிய அறிக்கைகளும் முளைத்திருக்காது எந்தவிதமான விசாரணைகளும் எழுந்திருக்காது.

எனவே ஐ.நா. தற்போது தோல்வியடைந்த அமைப்பாக வெளிப்பட்டுள்ளது என்று மேற்குலக நாடுகளின் தேவைகளை தமது கொள்கையாக்கிக் கொண்டு செயற்படுகின்றமையால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய ஐ.நாவின் உள்ளக விசாரணைகளுக்கான அடிப்படைக் காரணமாகும்.
இலங்கை விவகாரங்களில் ஐ.நா. மேற்குலக நாடுகள் சொல்வதைக் கேட்டு அதன்படியே செயற்படுகின்றது மேற்குலக நாடுகளின் தேவைகளுக்கேற்ப செயற்பட்டு சிறிய நாடுகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு துணைபோகும் கொள்கைகளை ஐ.நா.கைவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment