Wednesday, November 28, 2012

மலேசியாவில் நாடாளுமன்றக்குழு அமைப்பு; இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க

4f6967285a4c956e5a557c85194675c3இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய மலேசிய நாடாளுமன்றத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மலேசிய பிரதம மந்திரியின் திணைக்கள அமைச்சர் டெடுக் செரி நஷ்ரி அஸீஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக்குழு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பரிந்துரைத்த மனித உரிமைகள் அமர்வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதை கண்காணிக்கும்.
அத்துடன் இந்தக்குழு இலங்கைக்கு எதிரானது அல்ல. எனினும் அங்கு தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைமீறல்கள் தடுக்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குற்றமிழைத்தவர்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்படவேண்டும் என்பதை இந்த நாடாளுமன்றக்குழு வலியுறுத்தும்.
இதேவேளை குறித்த நாடாளுமன்றக்குழு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த நாடாளுமன்ற குழுவை மலேசிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ளன.
இக்குழுவிற்கு பிரதமமந்திரியின் திணைக்கள பிரதியமைச்சர் டெடுக் எஸ் கே தேவமணி தலைமை வகிக்கிறார்.
இந்தநிலையில் நாடாளுமன்றக்குழு எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதியன்று கூடி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment