Tuesday, November 20, 2012

சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை மாறிவிட்டது; மங்கள சமரவீர

11fce100672e6e965222929f4550a605இலங்கை நாடானது சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு வெளிநாட்டு தலைவர்கள் மிகக் குறைவாகவே விஜயம் செய்கின்றனர். எப்போதாவது உகண்டா போன்ற ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்
போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நமது பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை 99 வீதமான மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் சர்வதேச ரீதியில் பேசப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை ஆசியாவின் மற்றுமொரு பர்மாவாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment