Thursday, November 29, 2012

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம் : சீற்றத்தில் சிறிலங்கா அரசு !

imageபிரித்தானிய மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்து வரும் மற்றுமொரு அங்கீகாரமாக பலராலும் கருதப்பட்டு வருவதானது சிறிலங்காவினை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வினை சீர்குலைப்பதற்கான  மறைமுகமாக முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
நாளை வியாழக்கிழமை (29-11-2012)  பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வான புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கம் அறிவித்துள்ளது.
BRENT  TOWN HALL எனும் முகவரிக்கு மாற்றாக Zoroastrian Centre/ 440 Alexandra Avenue / Rayners Lane / HA2   9TL / Nearest Tube: Raners Laneஎனும் புதிய முகவரிவரியில் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தொடக்க அமர்வு இடம்பெறவிருக்கின்றது.
தொடக்க நாள் அமர்வில் பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வானது டிச2ம் நாள் வரை தொடர்சியாக இடம்பெறவுள்ள பாராளுமன் அமர்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் http://naathamnews.com/?page_id=306 இணையத்தளத்தின் ஊடாக உலகத் தமிழர்கள் கண்டுகொள்ள முடியுமென ஊடகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment