Friday, November 23, 2012

யாழ்.கொட்டடிப் பகுதியில் ஆண்களை சுட்டுக் கொல்லுவோம்: படையினரும் ஈபிடிபியினரும் அச்சுறுத்தல்

imageயாழ். கொட்டடி, முத்தமிழ் திடல் பகுதியிலிருந்து வெளியேற மறுக்கும் குடும்பங்களின் ஆண்களை சுட்டுக்கொல்லப் போவதாக படையினரும், ஈ.பி.டி.பியினரும் மக்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் மனிதவுரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
சுமார் 28 குடும்பங்கள் தங்கியுள்ள இந்தப் பகுதி மக்களுக்குரிய நிலம். எனினும், இந்தப்பகுதியில் பாரியளவில் சுற்றுலா விடுதியொன்றை அமைப்பதற்கு ஈ.பி.டி.பியினர் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில், படையினரின் ஆதரவுடன் மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சியெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு படையினர் மக்களை அச்சுறுத்தியிருந்த நிலையில் மீண்டும் நேற்றும், இன்றும் மீண்டும் அப்பகுதிக்கு வந்த படையினர் சனசமுக நிலைய கட்டிடத்தையும், முன்பள்ளிக் கட்டிடத்தையும் முற்றாக இடித்து அகற்றியுள்ளனர்.
மேலும் மக்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளதுடன், தேர்தல் காலத்தில் மக்கள் வீடுகளை அமைக்கவும், நிலத்திற்கான எல்லைகளை அமைத்துக் கொண்டு வாழவும் ஏற்பாடு செய்திருந்த ஈ.பி.டி.பியின் றீகன் என்பவரே வெளியேற மறுக்கும் குடும்பங்களிலுள்ள ஆண்களை சுடுவோம் என அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் மக்கள் நேற்றையதினம் யாழ். மனிதவுரிமைகள் இல்லத்தில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment