Thursday, November 22, 2012

பலம் பொருந்திய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு; விக்ரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு

5d99e2f7db6b7f3712d078343fd1de62பலம்பொருந்திய நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்களுக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் குரல் கொடுக்காது மௌனம் காத்து வருவதற்கு இதுவே காரணம். அமைதியான முறையில் இவ் இரண்டு நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை தொடர்பான விடயங்களில் மெத்தனப்போக்கை பின்பற்றி வருகின்றது இதற்கு பலம்பொருந்திய நாடுகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையுடன் அமெரிக்காவும், இந்தியாவும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளன.

13ம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி சர்வதேசத்திற்கு வாக்களித்திருந்தார். ஆனால் ஆளும் கட்சியின் சிலர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment