Sunday, November 18, 2012

சந்நிதி குகநாதா இசைப்பேழை வெளியீடு

image5வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகப் பெருமானை நினைந்து உமாசதீஸ் ஐஸ்வர்யன் தயாரித்த சந்நிதி குகநாதா எனும் இசைப்பேழை கடந்த வெள்ளிக்கிழமை கந்தசஸ்டி தினத்தன்று வெளியிட்டுவைக்கப்பட்டது.
இவ் இசைப்பேழையில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாரதக்கவிஞர் மதுரகவி மற்றும் ஈழக்கவிஞர் உமாசதீஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். தென்னிந்திய இசையமைப்பாளர் அக்கினி கணேசினால் இசையமைக்கப்பட்ட இவ் இசைப் பேழையில் இடம்பெற்றுள்ள பாடல்களை தென்னிந்தியப்பாடகர்கள் உன்னி கிருஸ்ணண் ராகுல் பவன் மற்றும் அருணா ஆகியோர் பாடியுள்ளனர்.

இசைப்பேழைக்கான அறிமுகத்தை சர்வேஸ்வரா வழங்கியுள்ளார். இவ் இசைப்பேழை விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளப்படும் நிதி முழுவதும் சந்நிதிக் கந்தன் ஆலய வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளது.இவ் இசைப்பேழையை பெற்றுக்கொள்ள விரும்பும் அடியார்கள் ஆலய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment