Friday, November 30, 2012

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிங்கள மாணவன் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டார்

imageயாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிங்கள மாணவன் ஒருவர் கோப்பாய் பகுதியில் நேற்று இரவு அவர் தங்கியிருந்த விடுதிக்குள் வைத்து இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த கோப்பாய் இராசவீதியில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நேற்று இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள் சிங்கள மாணவர்களைத் தாக்கத் தொடங்கியதாகத் தெரியவருகின்றது. இதனை அடுத்து அங்கு தங்கியிருந்த மாணவர்கள் கலைந்து ஓடிய போது ஒரு மாணவன் மாத்திரம் அகப்பட்டுக் கடுமையாத் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த படையினரும் கோப்பாய்ப் பொலிசாரும் குறித்த மாணவனை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்போது யாழ் போதனாவைத்தியசாலையில் மாணவன் சிகிகச்சை பெற்றுக்கொண்டுள்ளார். இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து குறித்த விடுதியில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment