குற்றங்களில்
இருந்து தப்பித்தலுக்கு எதிரான சர்வதேச நாளை அடையாளப்படுத்திக் கனடியத்
தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சிறி லங்காவிற்கு எதிரான பன்னாட்டுச் சுயாதீன
விசாரணையைத் தூண்டும் முகமாக ‘மௌனிக்கப்பட்ட குரல்கள் – சிறிலங்கா
ஊடகவியலாளரின் புலம்பெயர் வாழ்வு’ என்ற ஆவணத் திரைப்படம் இசுகாபரோ நகரில்
நவம்பர் 20ஆம் நாள் திரையிடப்பட்டது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருமதி பீற்றி
ஆனசுராட் அவர்களால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் பேச்சுச் சுதந்திரம் மற்றும்
உண்மைகளை வெளிக்காட்ட முற்படும் ஊடகவியலாளர் சிறி லங்காவில் எதிர்நோக்கும்
ஆபத்துகள் பற்றிய ஆதாரங்களை வெளியிடுகிறது.
பல இளையோரைக் கவர்ந்த இந்நிகழ்வு நெகிழ்வையும், கண்ணீரையும், உணர்வையும், உந்துதலையும் வரவழைத்தது. 60 மணித்துளிகள் கொண்ட காட்சியின் முடிவில் இயக்குனருடனான கேள்வி பதில் நிகழ்வைத் திரு. துசி ஞானப்பிரகாசம் அவர்கள் நடத்தினார். பார்வையாளர் பலரின் கேள்விகளுக்குப் பதிலளித்த இயக்குனர் சிங்களம் உட்பட வேறு பல மொழிகளில் இத்திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
நிகழ்வின் முடிவில் இவ்வாறு சிறி லங்கா அரசால் துன்புறும் ஊடகவியலாருக்குத் தகுந்த உதவிகள் செய்யப்பட வேண்டும் என்பதும் சிறி லங்கா மீதான பன்னாட்டு விசாரணைக்குத் தொடர்தும் அழுத்தங் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் பரலரதும் கருத்தாக இருந்தது.
நிகழ்வின் நிழற் படங்களுக்குக் கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.









No comments:
Post a Comment