Monday, December 03, 2012

23 நாடுகளை பாதுகாப்பான நாடுகளாக கனடா பிரகடனம்! இலங்கை அகதிகள் தப்பினர்!

Jkennyஇன்றைய குடிவரவு அமைச்சரின் அறிவிப்பின்; பிரகாரம் 23 நாடுகள் பாதுகாப்பான நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 2006ம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து குடிவரவுத் துறையிலும் அகதிக் கோரிக்கையாளர் விடயத்திலும் மாற்றங்களை கொண்டு வந்த கனடாவின் தற்போதைய பலவாறான மாற்றங்களை குடிவரவுத் துறையினை யாருமே தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்ற கோதாவில் மேற்கொண்டு வருகிறது.
குடிவரவு மற்றும் அகதிகள் விவகாரத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள புதிய சட்டவாக்கங்களும் நடைமுறைகளும் அகதிகள் வருகின்ற தொகையை 2006ல் இருந்து படிப்படியாகக் குறைத்துள்ளதாக இன்றைய ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக இன்று குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனியினால் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு புதிய நடைமுறையின் படி அவர்கள் பட்டியலிட்டுள்ள “பாதுகாப்பான நாடுகள்” என்ற 23 நாடுகளிலிருந்து வரும் அகதிகள் இனிமேல் அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தால் அவர்களது கோரிக்கை 30 நாட்களிலிருந்து 45 நாட்களிற்குள் பரிசீலிக்கப்பட்டு அவர்களிற்கு முடிவு அறிவிக்கப்படுவதுடன் அவர்களிற்கு மீள விண்ணப்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதர நாடுகளில் இருந்து வரும் அகதிகளில் விண்ணப்பங்கள் 60 நாட்களில் பரிசீலிக்கப்படும் என்பதோடு அவர்களிற்கு மேன்முறையீடு செய்யும் உரிமம் இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியல் ஒவ்வொரு வருடமும் மீளாய்வு செய்யப்படும் என்ற உறுதி மொழியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இலங்கைத் தமிழ் அகதிகள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரங்களுடன் நிரூபித்து அச் சம்பவச் சாட்சியங்களும் அகதிகள் தீர்மாணிப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்டால் அவர்களது விசாரணைகள் சாதகமான தீர்ப்பைப் பெறும் சந்தர்ப்பம் உள்ளது.

No comments:

Post a Comment