Tuesday, December 04, 2012

தாயகப் போராட்டங்களுக்கு தோழமையினைத் தெரிவிக்க புலம்பெயர் தேசங்களில் அணிதிரள்வோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

imageயாழ் பல்கலைக்கழ சமூகத்தின் மீதான சிங்களத்தின் கொடுங்கரங்கள்
தாயகப் போராட்டங்களுக்கு தோழமையினைத் தெரிவிக்க புலம்பெயர் தேசங்களில் அணிதிரள்வோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
யாழ் பல்கலைக்கழக சமூக்தின் மீது சிங்களப் பேரினாவாதத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைளுக்கு எதிராக தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீக வழியிலான எதிர்ப்பு போராட்டங்களுக்கு தோழமையினைத் தெரிவித்துக் கொள்வதோடு புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து நாளை செவ்வாய்கிழமை  யாழ்பாணத்தில் கண்டன ஆர்பாட்டமொன்றுக்கு இடம்பெறுகின்றது.
இவ்வேளை புலம்பெயர் நாடுகளிலும் இளையோர் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் தாயகப் போராட்டங்களுக்கு தோழமையினைத் தெரிவித்துள்ளதோடு புலம்பெயர் போராட்டங்களுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கள படைகளினது வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்றினை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு  ஐ.நா பொதுச்செயலருக்கு அவசர கடிமொன்றினை பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏலவே அனுப்பியிருந்தார்.
தாயகத்தில் சிங்களம் நமது மக்களின் மீதான ஒடுக்குமுறையினைத் தீவிரப்படுத்தி வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இடம் பெற்ற தாக்குதலும், மாணவதலைவர்களது கைதும் இந்த நீண்ட ஒடுக்குமுறைப் பட்டியலின் பிந்தைய சேர்க்கைகள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment