Saturday, December 01, 2012

புலிகளின் விமான தாக்குதல்களை கட்டுப்படுத்த இலங்கை, அமெரிக்காவிடம் மேலதிக உதவிக்கோரிக்கை!

us_slதமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல்களை அடுத்து இலங்கை இந்தியாவிடம் இருந்து மேலும் மூன்று ரடார் கருவிகளை கோரியதாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது
அத்துடன் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரிச்சட் பௌச்சரிடம், கொள்கலன் பாதுகாப்பு உதவியையும் கோரினார்.
விடுதலைப்புலிகள் விமான தயாரிப்புக்களுக்கான உபகரணங்களை துறைமுகங்களின் ஊடாக தருவிப்பதை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த கோரிக்கை அமெரிக்காவிடம் விடுக்கப்பட்டதாக அமரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

2007ம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதியன்று இந்த தகவல் இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் போகல்லாகம, கொள்கலன் பாதுகாப்பு உதவியை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரைஸிடமும் கோரியதாக அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment