Tuesday, December 04, 2012

மாணவரின் விடுதலை கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்; பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் குவிகின்றன

stugleயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும், பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலின் பின்னர் மாணவர் ஒன்றியச் செயலாளர் உட்பட கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரி குடாநாட்டில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்தை பொது அமைப்புகளும் தெற்கைச் சேர்ந்த கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ளன.
யாழ்.நகரில், பஸ் நிலையம் முன்பாக, முற்பகல் 11 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
எதுவித வேறுபாடுகளுமின்றி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
பொது அமைப்புகள் பலவும் தாம் இந்த ஜனநாயகப் போராட்டத்தில் கட்சி பேதமின்றிக் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரி வித்துள்ளன .
மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்தி இருந்தனர். அதனைக் கண்டித்து மாணவர்கள் மறுநாள் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்களை படையினரும் பொலிஸாரும்  கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கனக_ந்தர_வாமி ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர்  சண்முகம் சொலமன், மருத்துவபீட மாணவன்  கணேசமூர்த்தி _தர்சன் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இதனால் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த ஜனநாயகப் போராட்டத்துக்கு பொது அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

ஜனநாயக மக்கள்
முன்னணியும் களத்தில்
அதேவேளை, “”அரசின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் ஜனநாயக ரீதியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். நான்கு மாணவர்கள் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாட்டில் ஜனநாயகம் இறந்துவிட்டதையே காட்டுகின்றன.
இவ்வாறு ஜனநாயகம் இல்லாத நாட்டின் அர_க்கு எமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்தப் போராட்டத்துக்கு ஜனநாயக மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது”  என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா கூறியுள்ளார்.
இதேவேளை,  இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தானும், பாஸ்கராவும் கலந்துகொள்ளவுள்ளோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
விக்கிரமபாகு கட்சியினர் பங்கேற்பு
இதேபோல், இந்த ஆர்ப்பாட்டத்தில் நவ சமசமாஜக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர் என அக்கட்சியின் செயலர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. ஆதரவு
அத்துடன், யாழ். பல்கலைக்கழக  மாணவர்களின் கைதை ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இன்று யாழ்.நகரில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தில் தான் கலந்துகொள்ளவுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்
மார்க்ஸிய லெனினிசக் கட்சியும் போராடும் இந்தப் போராட்டத்தில் தமது ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியும் இணைந்துகொள்ளும் என்று அதன் தலைவர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவே தாம் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்னும் அவர் கூறினார்.
இதேவேளை, சமய அமைப்புகளும் மேலும் பல பொது அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு பெருமளவான பல்கலைக்கழக மாணவர்களும், பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.
யாழ். நகரில் ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டு மாணவர்களுக்காக குரல் கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment