Tuesday, December 04, 2012

இலங்கை தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களே எதிரிகள்: “தெ ஹிந்து” பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்

n_ram_001மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்தை போன்று எந்தவொரு அரசாங்கமும் இலங்கையில் ஆட்சி செய்ததில்லை. இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண த.தே.கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று “தெ ஹிந்து” பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் தெரிவித்துள்ளார்.
தம்மை புதுடில்லியில் வைத்து சந்தித்த இலங்கையின் பத்திரிகையாளர்களிடம் இந்த கருத்துக்களை ராம் வெளியிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பு,“பொல்பொட்” குழுவைப்போன்று செயற்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சத்தமின்றி இருந்து வந்தது.
விடுதலைப்புலிகள் சொல்வதையெல்லாம் செய்து வந்தது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு நாட்டிலும் சென்று அரசியல் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வை காணமுன்வர வேண்டும் என்று ராம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களே எதிரிகள் என்றும் ராம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தொடர்பில் கருத்துரைத்த ராம், ரணதுங்க சிறந்த கிரிக்கட் வீரர். எனினும் சிறந்த அரசியல்வாதியல்ல என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment