Tuesday, December 04, 2012

இலங்கை அகதிகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு விடுத்துள்ள சட்ட சவால்!

imageஅவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு புதிய சட்ட சவால் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.நேற்று காலை நாடுகடத்தப்படவிருந்ததாக கூறப்படும் 56 இலங்கையர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிட்னி நீதிமன்றம் குறித்த இலங்கையர்களின் நாடு கடத்தலுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது
இந்த தடையுத்தரவு நாளை மறுநாள் வியாழக்கிழமை வரை அமுலில் இருக்கும். இதன் பின்னர் மீண்டும் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அகதிகளுக்கான நடவடிக்கைக்குழு என்ற அமைப்பு அகதிகள் சார்பில் இந்த இடைக்கால தடையுத்தரவு மனுவை தாக்கல் செய்தது.

எனினும் குறித்த இலங்கையர்கள் நாடுகடத்தப்படுவதற்கான எவ்வித ஆயத்தங்களும் செய்யப்படவில்லை என்று அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய சட்டத்தின்படி குறித்த அகதிகள் பாதுகாப்பு கருதி தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் சிட்னி நீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையும் அவுஸ்திரேலியாவில் இருந்து 35 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment