Tuesday, December 04, 2012

அரசாங்க பாடசாலைகள் இன்று மூடப்படும் அபாயம்

imageதமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படும என்று ஆசிரியர், அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாலந்த கல்லூரி, றோயல்கல்லூரி, விசாகா வித்தியாலயம், தேவி பாலிகா வித்தியாலயம், சென்.போஸ்ஸ், மிளாகிரிய, சென் கிளேயர்ஸ், டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, ராஜகிரிய பிரஸிடென்ற் கல்லூரி ஆகியன அடங்கலாக சகல முன்னணிப் பாடசாலைகளையும் கேட்டுள்ளதாக ஆசிரியர்;, அதிபர் சங்கங்கள் கூறின.
இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கோரி பல்வேறு பாடசாலைகளுக்கு சென்று பிரசாரம் செய்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியது.
இதேவேளை இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கான சகல ஒழுங்குகளையும் செய்துளள்தாக சங்கத்தின் தலைவர் ஜெயசிங்க கூறினார்.
ஆசிரியர், அதிபர், சம்பள முரண்பாடுகள், வீடமைப்பு மற்றும் இடர்கால கடன், பதவி உயர்வு உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபரில் 16 தொழிற்சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கின.
அதிபர்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அதிகளவில் கடிதங்களை அனுப்பியுள்ளனர.; இது ஆசிரியர், அதிபர்களின் உரிமைகளை மீறுவதாகும்.
இந்த சுகாதார விடுமுறை போராட்டத்தை குழப்பவென அரசாங்க சார்ப்பு குழுக்கள் சில விசேட நிகழ்வுகளை நடத்த முயல்கின்றன. அதிகார வர்க்கத்தினர் எமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு பதில் தராதுவிடின் மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment