Monday, January 14, 2013

மாத்தளையில் 74 எலும்புக் கூடுகள் மீட்பு

20130113-052047.jpgமாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இதுவரை 74 எலும்புக் கூடுகளும் 60 மண்டையோடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாணப் பணிகளின்போது மனித எலும்புக்கூடுகளும் மண்டையோடுகள் பலவும் அண்மைக்காலமாக மீட்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து கடந்த மாதம் முதல் இவ் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று வரை 74 மனித எழும்புக்கூடுகளும் 60 மண்டையோடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment