Sunday, January 13, 2013

சத்தியத்தை வெல்ல ஆயுதமில்லை

 இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து ஆவேசமாக, ""நமக்கு அடிமையாக இருந்த எல்லா நாடுகளிலும் நடந்த கலவரங்களையும் சுதந்திரப் போராட்டங்களையும் அடக்கிவிட்டோம். ஆனால் இந்தியாவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்தை ஏன் அடக்க முடியவில்லை'' என்று கேட்டார்.
 அதற்கு பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் எழுந்து,""எந்த நாடும் கத்தியைக் கொண்டு போராடினால் துப்பாக்கியைக் கொண்டு அடக்கிவிடலாம். துப்பாக்கியைக் கொண்டு போராடினால் பீரங்கிகளைக் கொண்டு அடக்கிவிடலாம். பீரங்கிகளைக் கொண்டு போராடினால் ஆகாய விமானத்திலிருந்து குண்டு வீசி அடக்கிவிடலாம். ஆனால் இந்தியா சத்தியத்தைக் கொண்டல்லவா போராடுகிறது? சத்தியத்தை வெல்ல உலகத்தில் எந்த ஆயுதமும் இல்லையே'' என்று கூறினார்.


 தோற்றமும் தகுதியும்
 ஓவியர் ஒருவர் மாவீரன் நெப்போலியனைப் பேட்டி காணச் சென்றார். ஏழ்மையில் வாடி கந்தலும் கிழிசலுமான உடை அணிந்திருந்த அந்த ஓவியரிடம் சிறிது அருவருப்புடனேயே நெப்போலியன் பேட்டியளித்தார். ஆனால் ஓவியரின் அறிவும், பண்பும், கலைத்திறனும் உடைய சிறந்த கலைஞர் என்பதைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே புரிந்து கொண்டார் நெப்போலியன். பேட்டி முடிந்ததும் ஓவியரும் எழுந்தார். முதலில் அருவருப்புக் காட்டிய நெப்போலியன் பின்பு பரிவுடன் பேசியதைக் கண்ட ஓவியர் வியப்போடு அதன் காரணத்தை நெப்போலியனிடமே கேட்டுவிட்டார். சிரித்துவிட்டு நெப்போலியன் சொன்னார்,""ஓவியக் கலைஞரே! முன்பின் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய வெளித் தோற்றத்துக்கு ஏற்ப வரவேற்பு. ஆனால் பழகிப் பிரியும்போது அவரவர் தகுதிக்கேற்ப விடை கொடுக்கிறோம்'' என்றார்.

 ஹிட்லரைக் கவர்ந்த நாடு
 இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரிடம் அவரது நண்பர்கள் சுவிஸ் நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று கேட்டுக்
 கொண்டார்கள்.
 அதற்கு ஹிட்லர்,""வேண்டாம். சுவிட்சர்லாந்து ஓர் அழகான நாடு. நாம் ஆசைப்பட்டு இப்போதே அதை அழித்துவிட்டால் பிறகு எதிரிகளிடம் ஒன்றாக அமர்ந்து பேச நடுநிலை நாடு என்பது இல்லாமல் போய்விடும். மேலும் உங்களைப் போன்ற உயர் ராணுவ அதிகாரிகள் ஓய்வு கொள்ள விரும்பினால், போரில்லாத நாடு என்று ஒன்று வேண்டுமல்லவா? ஆகவே சுவிட்சர்லாந்தைத் தொடக்கூடாது'' என்று கூறினார்.
source:denamani

No comments:

Post a Comment