மதுரை மாவட்டத்துக்குள் நுழைய ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்துக்குள் நுழைய பாமக தலைவர் ராமதாஸுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
இந்த மனு, இன்று நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வழக்குரைஞர் காந்தி ஆஜரானார். விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது சட்ட விரோதமானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
அரசு தரப்பில், ஆஜரான வழக்குரைஞர், அரசு சாரபில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கை வரும் 18ம் தேதி ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும், அன்றைய தினம் தமிழக அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸின் வழக்குரைஞர் கேட்டுக் கொண்டார். ஆனால், தமிழக அரசின் பதில் மனுவை வைத்துத்தான் இடைக்காலத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி கூறிவிட்டார்.
No comments:
Post a Comment