Friday, January 11, 2013

இது தொடக்கமே தவிர முடிவல்ல: பொன்சேகா

20130110-181359.jpgபிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் இன்றுடன் முடியப்போவதில்லை.

இது தொடக்கமே தவிர முடிவல்ல என்று கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட சட்டத்தரணிகள் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் தெரிவித்தனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா கருத்து தெரிவிக்கையில்,
எமது கருத்தை இந்த அரசாங்கம் கவனத்தில் எடுத்து இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.சர்வாதிகாரத்திற்கு
முடிவுக்கட்டவேண்டும். பொல்பொட், இடி அமின் போன்றோரின் சர்வாதிகாரம் போன்று இந்த சர்வாதிகாரமும் நீடிக்கமுடியாது என்றார்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த கருத்து தெரிவிக்கையில்,
குற்றப்பிரேரணையை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்குமாயின் அது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும் என்றார்.
இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாய தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில், சட்டத்தரணிகளும் சட்டத்துறையிலுள்ள நட்பு சக்திகளும் தமது போராட்டத்தை தொடரவேண்டும். இது தொடக்கமே தவிர முடிவல்ல என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.சி வெலியமுன்ன நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் மதிக்காது விடின் அது நாட்டில் குழப்பத்திற்கே வித்திடும். மக்களின் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கவேண்டும். என்பதனையே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுட்டிக்காட்டுகின்றது என்றார்.

No comments:

Post a Comment