Sunday, January 13, 2013

முருகன்- நளினி சந்தித்தனர்

Rajiv-nalini-Murugan-2இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான முருகனும் அவரது மனைவியான நளினியும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துகொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முருகனுக்கு விதிக்கப்பட்டிருந்த 48 நாட்கள் தடை நிறைவடைந்ததை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முருகன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேலூர் சிறையில்  பொலிஸ் மேல் அதிகார் ஈஸ்வரன் தலைமையில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதன்போது அவரிடமிருந்து ஒன்றரை இலட்சம்  ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனபிரகாரம், பெண்கள் சிறையில்; இருக்கும் அவரது மனைவி நளினியை சந்திக்க தடை செய்யப்பட்டது. கடைசியாக நவம்பர் மாதம் 24 ஆம்திகதி நளினி- முருகன் சந்திப்பு நடந்தது. மேலும் முருகனை உறவினர்கள் பார்வையாளர்கள் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது.
முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 48 நாட்கள் நேற்று சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சிறைதுறை நன்னடத்தை விதியின் கீழ் எடுக்கபட்ட தடை நீக்கபட்டுள்ளது. இதனை யடுத்து பெண்கள் ஜெயிலில் உள்ள நளினியை முருகன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு நேற்றுக்காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நடந்தது.
வேலூர் ஆயுதபடை டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையிலான பொலிசார் முருகனை பெண்கள் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். முருகன்- நளினி சந்திப்பையொட்டி ஜெயில் வட்டாரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment