Saturday, January 12, 2013

வினோதினி மீது ஆசிட் வீசினார்: உதவிடுங்கள்!


வினோதினிக்கு 
உதவிடுங்கள்!
காரைக்காலை சேர்ந்தவர் வினோதினி. சாப்ட்வேர் என்ஜினீயர் படித்துள்ள இவர் சைதாப்பேட்டையில் தங்கி இருந்து கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். காரைக்காலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் வினோதினியை ஒருதலைப் பட்சமாக காதலித்துள்ளார். தனது காதலை ஏற்க மறுத்த காரணத்தால் தீபாவளிக்கு ஊருக்கு வந்த வினோதினி மீது ஆசிட் வீசினார்.

இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வினோதினி. நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் வினோதினியின் இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். கண்ணையும் சதையால் தைத்து மூடி உள்ளனர். வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது.

http://www.helpvinodhini.com/#!tamil/c1dvm 

No comments:

Post a Comment