Wednesday, January 09, 2013

கிளிநொச்சியில் சிங்களக் குடியேற்றம்: அச்சத்தில் பிரதேச தமிழ் மக்கள்

20130108-154550.jpgகிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் இராணுவத்தினரின் குடும்பத்தினரும், சிங்கள குடும்பத்தினரும் குடியேறுவதற்கு அரச, தனியார் காணிகளை அரச கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் முயன்றுவருவதாக கூறப்படுகின்றது.
மாவட்டத்தின் நகர் பகுதியை அண்மித்துள்ள, கரடிப்போக்கு சந்தி, சிவநகர், உருத்திரபுரம், டீ8 போன்ற இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரசாங்கத்தினருக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த கட்சியின் ஆதரவாளர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
பின்னர் அந்த நிலத்தில் இராணுவத்தினரின் குடும்பங்களையும், சிங்கள குடும்பத்தினரையும் தென்னிலங்கையிலிருந்து அழைத்துவந்து இவர்கள் குடியேற்றி வருவதாக பகிரங்கமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக அண்மையில் தனியார் நிலமொன்றை சிங்கள
குடும்பமொன்றிற்க்கு பகிர்ந்து கொடுத்த இந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்கள் அந்த நிலத்திலிருந்து சிங்கள குடும்பங்கள் வெளியேறவேண்டும் என வற்புறுத்தியிருந்த நிலத்தின் உரிமையாளரை தமது அலுவலகத்திற்கு அழைத்து அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலம் ஒன்றிலும் இவ்வாறு இராணுவச் சிப்பாய் ஒருவரின் குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இதுவரை காலமும் கிளிநொச்சியில் ஏற்படுத்தப்படாமலிருந்த சிங்கள குடியேற்றம் தற்போது கிளிநொச்சியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை மிகப்பெரிய ஆபத்து என மக்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment