சிறிலங்காவைச் சேர்ந்த பணிப்பெண் றிசானா நபீக் சவூதி அரேபியாவில் கழுத்து அறுத்துக் கொல்லப்படும் காட்சி அடங்கிய காணொலி உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை றியாத்தில் பொது இடமொன்றில் வைத்து, றிசானாவுக்கு சவூதி அரேபிய அதிகாரிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்கள் சுற்றிவர நிற்க, தலைகுனிய முழங்காலில் நிறுத்தப்பட்ட றிசானாவின் கழுத்தை, ஒருவர் வாளால் வெட்டித் துண்டாடும் அதிர்ச்சியளிக்கும் காட்சியை சவூதி அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
இதனை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அனைத்துலக அளவில் இந்தச் சம்பவம் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளட்ட பல நாடுகளும், அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளும், அனைத்துலகச் சட்டங்களை மீறும் இந்தப் படுகொலை வன்மையாக கண்டித்துள்ளன.
றிசானாவின் மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சி மிகக் கொரூரமானது என்பதால், பல இணையத்தளங்களில் இருந்து இந்தக் காணொலி நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment