வடக்கு
கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்தக் கோரி சமவுரிமை இயக்கத்தினால்
நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவனஈர்ப்பு போராட்டம்
இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்.பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்றது.
போராட்டத்தை குழப்பும் நோக்குடன்
இனந்தெரியாதவர்கள் சமவுரிமை இயக்கத்தின் வாகனம் மீது பண்ணைப்பகுதியில்
வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் போராட்டத்தில்
கலந்துகொண்டவர்கள் மீது கழிவு ஒயிலும் வீசப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள்
மீதும் கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!
வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!
கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!
அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!
என்ற கோஷங்களுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் பலர் ஆர்வத்துடன் தமது கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment